அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளும் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துளளது.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று (நவம்பர் 21) மாலை 4 மணிக்கு, அதிமுக தலைமை அலுவலக எம்ஜிஆர் மாளிகையில் வைத்து அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது..
அதிமுக முன்னாள் அமைச்சர் வெற்றியை எதிர்த்து வழக்கு .. தீர்ப்பு ஒத்திவைப்பு!
அடுத்து 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் , மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அது குறித்து முக்கிய ஆலோசனை இன்று மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை ஆகியவை பலப்படுத்துவது பற்றி இன்று ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அதிமுக முன்னரே அறிவித்து விட்டது. இதனால் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மற்ற கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளதா அல்லது தனித்து போட்டியிட உள்ளதா என்பது அதிமுகவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் தெரியவரும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…