“அதிமுக ராகுகாலம், எமகண்டம் பார்க்காது! அனைத்து நாட்களும் “கோல்டன் டேஸ்” தான்”- அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக ராகுகாலம், எமகண்டம் பார்க்காது: அனைத்து நாட்களும் கோல்டன் டேஸ் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அதிமுகவில் தற்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் வெளிப்பாடாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ராகுகாலம், எமகண்டம் பார்க்காது. அனைத்து நாட்களும் கோல்டன் டேஸ் தான் என தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர், துணைமுதல்வர் தனித்தனியாக ஆலோசனை நடத்திவருவது என்பது அண்ணன், தம்பிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.