களைகட்ட தயாராகும் அதிமுக மாநாடு… குளிர்சாதன வசதியுடன் மதுரைக்கு செல்ல சிறப்பு ரயில்…

ADMK Chief Seacretary Edappadi palanisamy

அதிமுக சார்பில் நாளை மதுரையில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கவுள்ளார். பல முக்கிய அதிமுக தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாநாட்டிற்கு வருவதற்கான பயண ஏற்பாடுகளை அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை, நடைபெறும் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் இன்று மதுரை  வந்தடைந்துள்ளது.

சுமார் 1300 அதிமுக தொண்டர்கள் பயணித்த இந்த ரயிலானது முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 13 பெட்டிகள் கொண்டு இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட சென்னை அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இருந்து புறப்படும் அதிமுக தொண்டர்களுக்கான பயண ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

சிறப்பு ரயில் மட்டுமின்றி, வழக்கமான ரயில்கள், பேருந்துகள், வேன், கார் என பல்வேறு வகைகளில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்