கரூர் வாக்கு மையத்தில் அதிமுக தலைமை முகவர் காளியப்பனுக்கு அனுமதி மறுப்பு
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சிறிது நேரத்தில் தொடக்க உள்ளது .மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
வேலூர் தொகுதியில் அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் 22 சட்ட சபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் கட்சிப் பொறுப்புடன் கூட்டுறவு பண்டகசாலை தலைவராக காளியப்பன் இருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் கொடுத்து உள்ளார்.அவரது புகாரை தொடர்ந்து அதிமுக தலைமை முகவர் காளியப்பனுக்கு கரூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.