25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் – அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நம்பிக்கை.!
25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நம்பிக்கை தெரிவித்தள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும் தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
வாக்களிப்பு : அதே போல, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிருஷ்ணன் உன்னி, காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் , அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் தங்கள் வாக்கினை செலுத்தினர்.
அதிமுக வெற்றி : இதில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், அனைவரும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என ஆர்வமுடன் இருக்கின்றனர். எனவும், கண்டிப்பாக 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
கட்சி துண்டு : அடுத்ததாக, அவர் அதிமுக துண்டு அணிந்து வந்து பின்னர் கழட்டிய விவகாரம் குறித்து கேட்கப்பட்டது . அதற்கு, அவர் இது இடைத்தேர்தல் என்பதால் இந்த கட்டுப்பாடு. முன்னர் பொதுத்தேர்தலில் வேட்பாளர் கட்சி துண்டு அணிந்து தான் வருவார்கள். நான் அதிகாரியிடம் கேட்டேன். அவர் அணியக்கூடாது என கூறினார். சரி என நான் கழட்டிவிட்டேன். என கூறினார்.
காலதாமதம் : பின்னர் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். என கூறினேன். அதற்கு வேட்பாளர்கள் 77 பேர் இருப்பதால் சற்று தாமதமாவதாகவும், ஆவணங்களில் கையெழுத்து வாங்க வேண்டியது இருப்பதாலும் தான் இந்த காலதாமதம் என அதிகாரிகள் கூறினார்கள் என அதிமுக வேட்பாளர் தென்னரசு தெரிவித்தார்.