அதிமுக மக்களவை உறுப்பினரும் (MP) மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ஆந்திரா கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது, யாருக்கு ஆதரவு என்பதை அதிமுக முடிவு செய்யும் என தெரிவித்தார்.
இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் நிலையில், அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு, தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் காங்கிரசும் மக்களவை செயலாளரிடம் நோட்டீஸ் அளித்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் ஆகிய 7 கட்சிகள் அறிவித்துள்ளன. 2014 பொதுத்தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் 282 ஆக இருந்த பாஜக-வின் பலம், இடைத்தேர்தல்களுக்குப் பிறகு 273 ஆகக் குறைந்துள்ளது.
மக்களவையில் பெரும்பான்மை பலத்திற்கு 272 எம்.பி.க்கள் தேவை என்ற நிலையில், சபாநாயகரையும் சேர்த்து பாஜக-வின் பலம் 274 ஆக உள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், ஆர்எல்எஸ்பி, எல்ஜேபி, சிரோன்மணி அகாலிதளம், அப்ணா தளம் ஆகிய கட்சிகளுக்கு 17 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டாலும் மத்திய அரசுக்கு சிக்கல் இல்லை. அதேசமயம், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் தெலுங்குதேசம் கட்சிக்கு 16 இடங்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 9 இடங்களும் உள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரசுக்கு 48 இடங்களும், திரிணமூல் காங்கிரசுக்கு 34 இடங்களும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு 11 இடங்களும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களும் உள்ளன. பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ள சிவசேனா கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தால் அக்கட்சிக்கு 18 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர அதிமுக-வுக்கு 37 இடங்களும், பிஜு ஜனதா தளத்திற்கு 20 இடங்களும், சமாஜ்வாதிக் கட்சிக்கு 5 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 6 இடங்களும் உள்ளன. 5 மக்களவை இடங்கள் காலியாக உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…