மக்களவை தேர்தல் : 2ஆம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!
ADMK : வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில்நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். நேற்று 16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியானதை அடுத்து இன்று மீதம் உள்ள 17 மக்களவை தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் பெயர் ஆகியவற்றை எடப்பாடி பழனிச்சாமி வெளிஇட்டுள்ளார்.
- ஸ்ரீபெரும்பதூர் -டாக்டர் ஜி.பிரேம்குமார்.
- வேலூர் – டாக்டர்.எஸ்.பசுபதி.
- தர்மபுரி – டாக்டர் ஆர்.அசோகன்.
- திருவண்ணாமலை – M.கலியபெருமாள்.
- கள்ளக்குறிச்சி – ரா.குமரகுரு
- திருப்பூர் – P.அருணாச்சலம்.
- நீலகிரி (தனி) – D.லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
- கோவை – சிங்கை G.ராமச்சந்திரன்.
- பொள்ளாச்சி – A.கார்த்திகேயன்.
- திருச்சி – P.கருப்பையா.
- பெரம்பலூர் – N.D.சந்திரமோகன்.
- மயிலாடுதுறை – P.பாபு.
- சிவகங்கை – A.சேவியர்தாஸ்.
- தூத்துக்குடி – R.சிவசாமி வேலுமணி.
- நெல்லை – வழக்கறிஞர் சிம்லா முத்துச்சோழன்.
- கன்னியாகுமாரி – முனைவர் பசிலியான் நாசரேத்.
- புதுச்சேரி – ஜி.தமிழ்வேந்தன்.
- விளவங்கோடு ( இடைத்தேர்தல் ) – திருமதி U.ராணி .
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதம் உள்ள தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகள் காலம்காண்கின்றன.