பரோலில் உள்ள பேரறிவாளன் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் உடல் நலக்குறைவு காரணமாக 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
பின்னர், மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். சமீபத்தில் தான் ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சிறுநீரகத் தொற்று மற்றும் நரம்பியல் தொடர்ப்பான நோய்களுக்காக விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.