CBSE +2 தேர்வுகள் முடிவுகள் வெளியான பின் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் – அமைச்சர் பொன்முடி
CBSE +2 தேர்வுகள் முடிவுகள் வெளியான பின் தான் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி பேட்டி.
சென்னை தலைமை செயலகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை இந்தளவிற்கு தாமதப்படுத்துவது வருத்தத்திற்குரியது. தேர்வு முடிவு தாமதமாக வருவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாதத்திற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும், CBSE +2 தேர்வுகள் முடிவுகள் வெளியான பின் தான் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு கொண்டு வர இருக்கின்ற, செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆளுநர் ஆதரிக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி திட்டமே உள்ளது. தமிழ் மொழியை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ் மொழியை மத்திய அரசு வளர்ப்பதாக கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.