மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பலோ மருத்துவமனையில் அனுமதி!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். தமிழக பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தானே வழக்கறிஞராக வாதாடி வருகிறார்.
வைகோ 75 வயதிலும் அரசியல் நிகழ்ச்சிகள், போராட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு வருவதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் ரத்த அழுத்தம் பிரச்சனை காரணமாக மதுரையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மதிமுக பொது செயலாளர் வைகோ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியதால், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சார பேரணி ஒத்தி வைக்கப்பட்டதாக மதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.