இன்று முதல்+1 வகுப்பில் சேர மாணவர் சேர்க்கை.!
கொரோனா வைரஸ் காரணமாக் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், 10-ம் வகுப்பில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக +1 வகுப்பில் சேர மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல்+1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. அனைத்து பள்ளிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை போது மாற்றுச்சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எடுத்து வர பள்ளி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.