கல்குவாரிக்கு அனுமதி; புதுக்கோட்டை ஆட்சியர் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு.!
திருமயம் கல்குவாரிக்கு அனுமதி தந்த விவகாரத்தில், புதுக்கோட்டை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருமயம் விராட்சிமலைப் பகுதியில் கல்குவாரி நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கிய விவகாரத்தில், இதனை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. கல்குவாரி அமைந்தால் அங்குள்ள பகுதிகளின் விவசாயம் பாதிக்கப்படும் எனக்கூறி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுதாரர் தொடர்ந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் சமர்ப்பித்த அறிக்கை முரணாக இருப்பதாக கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியர் வரும் 20 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.
முன்னதாக மனுதாரர் தனது மனுவில், கல்குவாரி அமைய அனுமதி வழங்கப்பட்ட இடங்களை சுற்றி 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் இருப்பதாகவும், நீர்ப்பகுதிகள் இருக்கும் இடத்தை அகற்றி சாலை அமைக்கப்பட்டதாகவும், இதனால் இதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவேண்டும் என கோரியிருந்தார்.