தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 11 இளங்கலை பட்டப்படிப்புகள் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் மூலமாக வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கான (2021-222) இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளிடமிருந்து செப்டம்பர் 8, 2021 முதல் (புதன்கிழமை) இணையதளம் மூலமாக பெறப்படவுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பின்படி, இந்த கல்வி ஆண்டு முதல் புதிதாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகள் தமிழிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்த தமிழ் வழி படிப்புகள் கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கப்படவுள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பின்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமானது. நடப்பு கல்வியாண்டிலே மேலும் புதிதாக ஒரு தோட்டக்கலைக் கல்லூரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரிலும் மூன்று வேளாண்மை கல்லூரிகள் முறையே கரூர் மாவட்டத்திலும், கீழ்வேளூர், நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மற்றும் செட்டிநாடு, சிவகங்கை மாவட்டத்திலும் துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெறும் என்று முனைவர். மா.கல்யாணசுந்தரம், கோவை வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் மற்றும் தலைவர் (மாணவர்கள் சேர்க்கை) அவர்கள் தெரிவித்தார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…