சில ஆவணங்கள் இல்லாவிட்டாலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை
சில ஆவணங்கள் இல்லாவிட்டாலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
கொரோனா ஊரடங்கால் மாணவ, மாணவிகள் அனைவரும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் அடுத்து வரும் நாட்களிலும் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி, அரசுப்பள்ளிகளில் சேர விரும்பும் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் மாற்று சான்றிதழ் வழங்காவிட்டால், அதுகுறித்து பள்ளிக்கல்விதுறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், சில ஆவணங்கள் இல்லாவிட்டாலும் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சேர்க்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.