11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்- முதல்வர்.!
நேற்று திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் தினமும் 85,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும், தமிழகத்தில் புதிதாக தொடங்கவுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் உள்ள புதிய திட்டபணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.