அரசு பள்ளிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய போதிலும் கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வராமல் இருப்பதை அடுத்து அவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கடந்த 17ஆம் தேதி முதல் 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பல இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் நடைப்பெற்று வருகிறது . அரசு கூறியுள்ள அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வருகை தந்து மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் சென்று அரசு பள்ளிகளின் நன்மைகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களிடம் கூறி குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து விட முயற்சி செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி அவர் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சிலர் மாணவர் சேர்க்கை ஆரம்பித்த பின்னரும் பள்ளிகளுக்கு வரவில்லை என்று தெரிய வந்ததை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.
அதில் வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு தினமும் வருகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வராத ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…