#Breaking:பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி..!
- தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தளர்வுகளின்படி,பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஜூன் 14 ஆம் தேதி வரை அறிவித்துள்ள ஊரடங்கை நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் எண்ணத்திலும் மேலும் நீட்டித்து ஜூன் 21 ஆம் தேதி வரை செயல்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கில் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நோய் தொற்று அதிகம் இருக்கும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் கூடுதலாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,பள்ளி,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிர்வாகப் பணிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.