இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை.!!
தமிழகத்தில் உள்ள அணைத்து அரசுப் பள்ளிகளில் இன்று முதல் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
தமிழகத்தில் இருக்கும் அணைத்து அரசு பள்ளிகளும் வரும் 2023-2024 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று (திங்கள்கிழமை) முதல் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த வாகன விழிப்புணர்வு “அரசு பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த
பிரச்சாரத்தை கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார். மேலும், முதல் முறையாகத் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் ஏப்ரல் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், எப்போதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் மாதத்தில் தான் நடைபெறும்.
ஆனால், தற்போது இந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது. அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்பு வரை இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. மேலும், “அரசு பள்ளிகளைக் கொண்டாடுவோம்” வாகன பேரணி வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.