கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடங்கியது…!
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. தமிழகத்தில் 8,446 பள்ளிகளில் rte.tnschools.gov.in இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகளில் 25% ஆன 1.20 லட்சம் இடங்களில் சேர, ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.