மீண்டும் வழக்கு ஒத்திவைப்பு! பொதுச்செயலாளர் தேர்வு அடிப்படை விதிகளுக்கு விரோதமானது – ஓபிஎஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

செயற்கையான முறையில் பல்வேறு நடவடிக்கைகைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அதிமுக  ஓபிஎஸ் தரப்பு வாதம்.

அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் இரண்டாம் நாள் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றுது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு வீசாரணை நடத்தினர். ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதங்களை முன்வைத்தார். அப்போது கூறுகையில், ஜூலை 11 பொதுக்குழு மூலம் பொதுச்செயலாளர் தேர்வு அதிமுகவின் விதிகளுக்கு எதிரானது.

அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அதிமுகவின் விதி, அதனை மாற்ற முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தீர்மானம், பொதுக்குழுவில் முன்வைக்கப்படவில்லை. ஜூன் 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் கோரும் தீர்மானம் முன் வைக்கப்படவில்லை என்றனர்.

மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என கட்சி வீதியில் இல்லை. தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால் பதவி காலியானதாக எப்படி கூற முடியும்? பொதுச்செயலாளர் தேர்தலில் யாரும் போட்டியிடாதவாறு புதிய விதிகளை கொண்டு வந்தார்கள் என குற்றசாட்டியுள்ளார்.

சட்டமன்றம், மக்களவை தேர்தல்களில் விதிக்கப்படாத நிபந்தனைகள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டன. எனவே, தனி நீதிபதி அடிப்படை கட்டமைப்பு விதிகளை கவனிக்க தவறி விட்டார் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு  ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

5 minutes ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

56 minutes ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

60 minutes ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

2 hours ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

2 hours ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

3 hours ago