ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Default Image

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். அறப்போர் இயக்கத்தின் செயல் தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி மனுவில் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என அறப்போர் இயக்கம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதன்பின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்