ஜெயலலிதா இல்ல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக தீபக், தீபா தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.
வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தியது, இழப்பீடு நிர்ணயித்ததற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிவு பெற்றது. ஜெ.தீபா, ஜெ.தீபக் மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து. ஜெயலலிதா வாரிசான தன்னிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று மனுதாரர் ஜெ.தீபக் தெரிவித்துள்ளார்.
ஒப்புதலே அளிக்காத போது ரூ.67.90 கோடி இழப்பீடு நிர்ணயித்தது சட்டவிரோதம் என ஜெ.தீபா தனது வாதத்தை முன்வைத்தார். அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே நிலம் கையகப்படுத்தப்பட்டது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது, தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025
பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!
March 12, 2025