ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆர்.எஸ.பாரதியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் மே 31-ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.இதனால் ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றம் வந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்று, உயர்நீதிமன்றத்தை நாட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியது. மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன என்று கூறி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூன் 19-க்கு ஒத்திவைத்து நீதிமன்றம்.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…