ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குழுக் கூட்டம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!
தமிழகத்தில் சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அரசு சார்பில் செயப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்கிறார்.
தனி சிறப்பு நீதிமன்றங்கள் :
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் மற்றும் மறுவாழ்வுத் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க ஏற்கனவே 22 நீதிமன்றங்கள் உள்ளன, இருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கூடுதலாக நான்கு தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.
சாதி வேறுபாடற்ற மயானம் :
மேலும், சாதி வேறுபாடற்ற மயானங்களைக் கொண்டுள்ள ஊர்களுக்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் திட்டம் செய்லபடுத்தப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்தினால் 70 ஊர்கள் பயனடைந்துள்ளதாகவும் கூறினார்.
மனிதநேய வார விழா :
தீண்டாமை கடைபிடிக்கப்படாமல் மக்கள் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ.10 நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் 37 கிராமங்கள் பயனடைந்துள்ளதாகவும் கூறினார். பொதுமக்களுக்கிடையே தீண்டாமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த ஜனவரி மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை மனிதநேய வார விழா நடத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.