“விசிக-வை குளோஸ் பண்ண போறாங்க.,” திருமாவுக்கு அட்வைஸ் கூறிய ஆதவ்!
திமுக, மதிமுகவை தங்களுடன் சேர்த்து குளோஸ் செய்த்து போல விசிகவை குளோஸ் செய்ய பார்க்கிறார்கள் என திருமாவளனுக்கு ஆதவ் அர்ஜுனா அட்வைஸ் செய்துள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், முக்கிய நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோரும், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய்க்கு கட்சியில் முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானம், இருமொழி கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. இதனை அடுத்து கட்சி மூத்த நிர்வாகிகள் பேச தொடங்கினர். அப்போது ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ஆளும் திமுக அரசையும், பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
அதில், ஆதவின் அரசியல் ஆசானாக கருதப்படும் விசிக தலைவர் திருமாவளவன் பற்றி பேசினார். ஆதவ் பேசுகையில், ” வேங்கைவயல் பிரச்சனையில் அங்குள்ள அரசியல் தலையீட்டில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். தலித் பிரச்சனை தமிழ்நாட்டில் நிறைய இருக்கிறது.
மலம் கலக்குகிறார்கள், பேருந்தில் ஏறினால் வெட்டுகிறார்கள், பைக்கில் சென்றால் கையை வெட்டுகிறார்கள். காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. இதில் மேஜர் கூட்டணி கட்சியான விசிக ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும். 40 வருடங்களாக உங்கள் பயணத்தை நாங்கள் பார்த்து வருகிறோம். அதனை இழிவுபடுத்த மாட்டோம். திமுக உங்களை ஒட்டுமொத்தமாக குளோஸ் செய்ய பார்க்கிறார்கள்.
மதிமுகவை ஒன்றாக சேர்த்து எப்படி குளோஸ் செய்ததோ, அதேபோல விசிகவை குளோஸ் செய்ய திமுக பார்க்கிறது. எப்படி மோடி கூட இருப்பவர்கள் கட்சியை கலைச்சிடுவாங்களோ, அதுபோல் தான் திமுக வேலை செய்கிறது. திமுகவுடன் கூட்டணி என சென்றால் எல்லாருக்கும் சீட்டு கொடுத்து திமுக சின்னத்திலேயே நிற்க சொல்லி விடுவார்கள். அந்த அளவுக்கு ஜனநாயகம் கேள்வி குறியாகி உள்ளது. விழிப்புணர்ச்சியோடு சிந்திக்க வேண்டும்.” என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.