விஜயின் தலைமையை ஏற்கும் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமாரை அடுத்து 3வது நபர் யார்?

ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் விஜயின் தவெக கட்சியில் இன்று இணைய உள்ளனர்.

Aadhav arjuna - TVK Leader Vijay - CTR Nirmal kumar

சென்னை : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். அதனை தொடர்ந்து கடந்த வருடம் அக்டோபரில் தவெக-வின் முதல் மாநாடு நடைபெற்று தமிழக அரசியல் களத்தை திரும்பி பார்க்க வைத்தது என்றே கூறலாம்.

அதனை அடுத்து அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மற்றும் பரந்தூர் மக்களை சந்தித்த நிகழ்வு ஆகியவற்றில் தவெக தலைவர் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. விஜயின் அடுத்தடுத்த நகர்வுகள் , தவெக கட்சியில் பல முக்கிய  அரசியல் பிரமுகர்களை கட்சிக்குள் கொண்டு சேர்க்கிறது.

விசிக-வில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு, திமுக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வியூக பொறுப்பு உள்ளிட்ட முக்கிய தேர்தல் பொறுப்புகளை கவனித்து வந்த ஆதவ் அர்ஜுனா,  விசிக கட்சியில் இருந்து அண்மையில் விலகினார். அதனை தொடர்ந்து அவர் விஜய் தலைமை ஏற்று தவெக-வில் இணைவார் என கூறப்பட்டது.

அதற்கேற்றபடி, தற்போது ஆதவ் அர்ஜுனா தவெக-வில் இணைவதற்கு ஆதவ் அர்ஜுனா பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து அரசியல் பிரமுகர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரும் பனையூர் வந்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று தவெக-வில் இணைய உள்ளனர்.

தவெக கட்சித் தலைவர் விஜய் தற்போது பனையூர் கட்சி அலுவலகம் வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் மேற்கண்ட இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக-வின் தேர்தல் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும், பாஜக ஐடி விங் மற்றும் அதனை தொடர்ந்து அதிமுக ஐடி விங் பிரிவில் இருந்து நிர்மல் குமாருக்கும் தவெகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களை அடுத்து இன்னொரு முக்கிய நபராக நாம் தமிழர் கட்சியில் நட்சத்திர பிரமுகராக உள்ள காளியம்மாள், தவெக-வில் இணைய உள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் , காளியம்மாள் இடையே கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதனால் காளியம்மாள் வெளியேறுகிறார் என்றும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. ஆனால், தவெகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தியை காளியம்மாள் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin
AA22xA6
mk stalin - RN RAVI
TVK Leader Vijay
Supreme court of India - TN Governor RN Ravi