டிஐஜி விஜயகுமார் தற்கொலை.! கோவை முக்கிய காவல் அதிகாரிகளுடன் ஏடிஜிபி தீவிர ஆலோசனை
டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து கோவை முக்கிய காவல் அதிகாரிகளுடன் ஏடிஜிபி அருண் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
நேற்று அதிகாலை கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ஐபிஎஸ் , தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி கொண்டு தனது அறையில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார் . அவர் மன அழுத்தத்தில் இருந்த காரணத்தால் தான் உயிரிழந்தார் என காவல்துறையினர் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை சரக சட்ட ஒழுங்கு ஏடிஜிபு அருண் தலைமையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஐஜி விஜயகுமார் மரணம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .