கருப்பு பூஞ்சைக்கான மருந்தை போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் – ஓ.பி.எஸ் கோரிக்கை!

Published by
Rebekal

கருப்பு பூஞ்சை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை போதுமான அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் பாதிப்புகளே இன்னும் ஓயாத நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக கருப்பு பூஞ்சை தொற்று தற்போது பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நோய் இன்னதென்று கண்டறிந்து, பின் அது உண்டான காரணத்தை அறிந்து, அதன்பின் அந்நோயை படிப்படியாக நீக்கும் வழிமுறையைக் கையாண்டு, நோய் நீங்கும்படி மருத்துவம் செய்ய வேண்டும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க கொரோனா நோய்த் தொற்றினை முற்றிலும் களைவதற்கு உண்டான நடவடிக்கைகளை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், “பட்ட காலிலே படும்” என்பதற்கேற்ப கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகள், கறுப்பு பூஞ்சை என்ற நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இதுவரை 11,717 நபர்கள் கறுப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது. இந்த நோயினால் குஜராத், மகாராஷ்டிரா. ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயினால் தமிழ்நாட்டில் 226 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மூன்று நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஓசூர் பகுதியில் கறுப்பு பூஞ்சை வேகமாக பரவி வருவதாகவும், கொரோனா தொற்றினால் நோய் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாவதாகவும், இத்தொற்றுக்கான மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை என்றும், ஒரு டோஸ் மருந்து பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்துகள் இல்லை என்றும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதாகவும் அம்மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனரே தெரிவித்ததாக பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது. இந்த நோய்த் தொற்றின் பரவல் அதிகரிக்கும்பட்சத்தில், அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப் பெரிய சவாலாகிவிடும்.

எனவே, “வருமுன் காப்போம்” என்பதற்கேற்ப அரசின் செயல்பாடு இருப்பது அவசியம் என்பதோடு மட்டுமல்லாமல், இதற்குத் தேவையான Amphotericin B மருந்தினை போதுமான அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும், இந்த நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago