சைபர் கிரைம்.. வாட்சாப் குழுக்கள்.. போதை பொருட்கள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், வாட்ஸ் ஆப் குழுக்கள் கண்காணிக்கப்பட வேண்டும். தென் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மதுரை வந்தார். வந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது தென் மாவட்ட காவல் அதிகாரிகளுடன் சட்ட ஒழுங்கு பற்றிய ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சட்டம் ஒழுங்கு : இந்த ஆய்வு கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி , சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய முதல்வர் சட்டம் ஒழுங்கு பற்றிய பல்வேறு விஷயங்களை வலியுறுத்தினார்.
அனைவரும் சமம் : முதல்வர் கூறுகையில், போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். அடுத்து, காவல்நிலையத்திற்கு வருவோரை எளியவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என கேட்டுகொண்டார்.
சைபர் குற்றங்கள் : மேலும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், வாட்ஸ் ஆப் குழுக்கள் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும், தென் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.