டிஜிட்டல் இந்தியா மூலம் ஊழலுக்கு தீர்வு – ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு
திருச்சி இந்திய மேலாண்மை கழகத்தில் நடைபெற்ற தஷா 2.0 கருத்தரங்கில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, இந்தியாவில் ஊழல் ஒரு பிரச்சனையாக உள்ள நிலையில், அதற்கு தீர்வாக டிஜிட்டல் இந்தியா இருக்கிறது. அரசின் பணம் நேரடியாக பயனாளிகளுக்கு சென்றுவிடுவதால் இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடியவில்லை.
முன்பு அரசு ஒரு ரூபாய் ஒதுக்கினால் பயனாளிகளுக்கு 15 பைசா மட்டுமே சென்றடைந்தது. தற்போது, அரசின் பணம் நேரடியாக பயனாளிகளுக்கு சென்று விடுகிறது, இதில் முறைகேடு செய்ய முடியவில்லை. மத்திய அரசு தொலைநோக்கு திட்டங்களை தீட்டுவதால் நாடு மேம்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.