மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம்..!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் செலுத்தும் நாளிலிருந்து 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு நுகர்வோருக்கு நவ.28-ம் தேதி மின் கட்டணம்செலுத்துவதற்கான இறுதி நாள் என்றால், அவருக்கு நவ.30 வரை அவகாசம் வழங்க வேண்டும். அதேநேரம், ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் இணைக்கும் வரை நுகர்வோர் ஆஃப்லைன், ஆன்லைன் முறைகள் மூலம் பணம் செலுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.