இன்று முதல் சேலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் – ஆட்சியர் அறிவிப்பு..!

Default Image

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா பரவல் மீண்டும் சற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். அதன்படி, சேலத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த 2 வாரங்களுக்கு மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி:

  • சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6.00 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், மேற்படி வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை.
  • செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • வ.உ.சி மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • துணிக்கடைகள், நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

சேலம் ஊரகம்:

  • வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காட்டிற்கு பயணிக்கும் பயணிகள் கோவிட்-19 கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
  • கொங்கணாபுரம் வாரச்சந்தை, வீரகனூர் வாரச்சந்தை,வரும் 23ம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது என்றும் மேட்டூர் அணை பூங்கா 23ம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
  • இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்