வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 6 அன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் 12.03.2021 அன்று துவங்கப்பட்ட வேட்பு மனு தாக்கலானது 19.03.2021 அன்றுடன் முடிவடைய உள்ள சூழலில், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதிய வங்கிக்கணக்கு துவங்க முடியாமல் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களை இந்திய தேர்தல் ஆணையம் அறியும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மொத்தம் 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் கடந்து இன்னும் 4 தினங்களே உள்ளது. அதிலும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், வேட்பாளர்கள் தாங்கள் நிற்கின்ற தொகுதிகளில் புதிய வங்கிக்கணக்கு துவங்க முடியாமல், வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் உள்ளார்கள்.
ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவது உறுதி செய்வதுடன் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிடுவதற்கு ஏற்ற சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவே, மாநில தேர்தல் ஆணையமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலை கருதி வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…