வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்.. சரத்குமார் கோரிக்கை..!

Default Image

வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 6 அன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் 12.03.2021 அன்று துவங்கப்பட்ட வேட்பு மனு தாக்கலானது 19.03.2021 அன்றுடன் முடிவடைய உள்ள சூழலில், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதிய வங்கிக்கணக்கு துவங்க முடியாமல் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களை இந்திய தேர்தல் ஆணையம் அறியும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மொத்தம் 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் கடந்து இன்னும் 4 தினங்களே உள்ளது. அதிலும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், வேட்பாளர்கள் தாங்கள் நிற்கின்ற தொகுதிகளில் புதிய வங்கிக்கணக்கு துவங்க முடியாமல், வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் உள்ளார்கள்.

ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவது உறுதி செய்வதுடன் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிடுவதற்கு ஏற்ற சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவே, மாநில தேர்தல் ஆணையமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலை கருதி வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்