தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் , கொரோனா தொற்று கடந்த 7 நாட்களில் விரைவாக அதிகரித்து இரு மடங்காகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61593 ஆகவும், உயிரிழப்பு 13 ஆயிரத்துக்கு அதிகமாகவும் உள்ளது. இந்நிலையில் தடுப்புசி பற்றாக்குறையால் தமிழகமே தவித்து வருகிறது.
தமிழக அரசுக்கு கேட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்ப வேண்டும். மருந்து கொள்முதலில் மாநிலங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். மாநிலங்களை தடுப்பூசி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு விரைவில் எடுக்க வேண்டும். பிரதமரே நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் திமுக எம்பிக்கள் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…