தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம்.! முதல்வர் அறிவிப்பு.!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு கூடுதலாக தமிழக அரசு சார்பில் 5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உண்மை தன்மையை ஆராய நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதில், பல்வேறு கோரிக்கை அதில் குறிப்பிடப்பட்டது. மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு கூடுதல் நிவாரண தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு கூடுதலாக 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டின் மீது தனது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தார்.