அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
அரசுப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.
அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித் தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் மின் பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து தீர்வு காணப்படும் என்றும் கூறினார்
கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலினை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முன்பு நடைபெற்ற தமிழக பேரவை கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது நேரத்தின் போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.