தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ. 744 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று, அதன்பின்னர்,தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி வெளியாகின.
எனினும்,தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே,தேர்தல் செலவிற்காக 617.75 கோடி ரூபாய் முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.பிறகு தேர்தல் முடிந்ததும் அதற்கான வரவு,செலவு கணக்கு பார்க்கப்பட்டது.அதில் 126.18 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்யப்பட்டு இருந்தது.எனவே,அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய அரசிடம் தலைமை தேர்தல் அதிகாரியான சத்திய பிரதா சாகு கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில்,தேர்தலுக்கு ரூ. 744 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில் தொலைபேசி, எரிபொருள், வாகனத்திற்கான வாடகை, விளம்பரம் உள்ளிட்டவற்றுக்காக 126.18 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…