அதானி விவகாரம்: எல்ஐசி, எஸ்பிஐ முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம்.
நாடு முழுவதும் எஸ்ஐசி மற்றும் எஸ்பிஐ அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதானி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அதானி விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரெஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.அதானி விவகாரம் தொடர்பாக சென்னை ஜிபி சாலையில் உள்ள எல்ஐசி தெற்கு மண்டல அலுவலகம் மற்றும் எஸ்பிஐ முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று காரைக்குடியில் எல்ஐசி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதானி நிறுவனத்தின் பங்குச்சந்தை மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.