அடடே! கலக்கல் ஐடியா பேனர்களை வைத்து ரெயின் கோட் செய்யும் இளைஞர்கள்..!!
- பயன்படாத பேனர்களை வைத்து ரெயின் கோட் செய்யும் இளைஞர்கள்.
- ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வினா போகும் பேனர்களை வைத்து ரெயின் கோட் செய்யும் இளைஞர்களுக்கு பாராட்டு.
கோவில் கொடை,கல்யாணவீடு,கட்சிக் கூட்டங்கள்,திரைப்படவெளிட்டு விழா, இது அனைத்திற்கும் பேனர்களை வைப்பதை தவிர்க்க முடியாத ஒன்றாகும். அந்தவகையில் இந்த பேனர்களை சில நாட்கள் கழித்து அதை பயன்படுத்த முடியாத நிலையில் போய்விடும்.
இந்நிலையில் தற்போது அதை தடை விதிக்கப்பட்ட பிறகு பயன்பாடற்ற போனவர்கள் எக்கச்சக்கம் அப்படி பயன்படுத்தப்படாத பேனர்களை ரெயின் கோட்டாக வடிவமைத்து மீள் உருவாக்கம் செய்து சென்னையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இளைஞர்களான அப்துல் மற்றும் சக்தி இவர்கள் உருவாக்கப்படும் ரெயின் கொட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றன.
காசு கொடுத்து வாங்க முடியாது ஏழைகளுக்கு இப்படி வழங்கப்படும் ரெயின் கோட் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை கண்டு அனைவரும் இப்படி பேனரை பயன்படுத்துவதாக மாற்றிக் கொடுக்கும் இளைஞர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த மாதிரி செயல்பாடுகளில் ஈடு பட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.