நடிகை ஜோதிகா தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்தவர்.மேலும் இவர் சக நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதற்கு பின் சினிமாவிற்கு ஒரு இடைவெளி கொடுத்தார். சினிமாவின் தனது இரண்டாவது பயணத்தில் மிகவும் கவனமுடன் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.தற்போது நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள படம் ராட்சசி படம் ஜுலை 5-ல் வெளிவர உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.படம் பள்ளி நிகழ்வுகளை படம் பிடித்து காண்பித்துள்ளது.இந்நிலையில் ரசிகர்கள் படத்தின் டீசரைப் பார்த்து விட்டு நடிகை ஜோதிகாவை லேடி சமுத்திரகனி என்று கூறியுள்ளனர் படம் மற்றொரு சாட்டை மற்றும் பள்ளிக்கூடம் என்றும் கூறி தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.
இது குறித்து நடிகை ஜோதிகா தற்போது ராட்சசி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.அதில் நடிகை ஜோதிகா நான் ட்விட்டரில் இல்லை. எனவே எனது கணவரின் போனில் தான் இதனை பார்த்தேன். (சட்டை -பள்ளிக்கூடம் ) போன்று படங்களை போன்று இந்த படத்திற்கு இதுபோன்ற சமூகக் கருத்துகள் வந்துள்ளது மிகவும் நன்றாக உள்ளது.இன்றைய சூழலில் இது போன்ற படங்கள் இன்றைக்கு தேவைப்படுகிறது.
மேலும் அவர் பேசுகையில் 99% மாணவர்கள் அகரம் பவுண்டேஷனில் உள்ளனர்.அதில் அரசு பள்ளிகளில் இருந்து வந்து பயிலும் மாணவர்கள். அவர்களில் 35 % மாணவர்கள் இடம் பேசும் பொழுது ஒரு மாதம் அவர்களுடைய வகுப்புகளில் ஏன்..? ஒரு ஆண்டு முழுக்ககூட ஆசிரியர்களே இருப்பதில்லை என்று தெரிகிறது. ஆசிரியர்கள் இல்லாமல் அந்த மாணவர்கள் வகுப்புகளில் படித்து இருக்கிறார்கள்.
அதுபோல ஒரு சிஸ்டத்தை கொடுத்துவிட்ட பின் மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டும் என்று இவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள். என்று தெரிவித்தார் மேலும் அவர் இப்படிப்பட்ட பிரச்னைகளைப் பேசுகின்ற கதைகள் 100 படங்களில் வந்தாலும் அதனை நாம் பார்க்க வேண்டும்.என்று தெரிவித்தார் என்னுடைய இரண்டாவது திரை பயணத்தில் மிகவும் நல்ல கதைகள் வருகின்றது.பெண்களுக்கு மரியாதை அளிக்கக்கூடிய ஆண்கள் எனது இந்த இரண்டாவது திரைப்பயணத்தில் தான் அதிகம் பார்க்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…