வகுப்புகளில் ஆசிரியர்களே இல்லை..!நீட் தேர்வு எழுத வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்..!ஜோதிகா

Default Image

நடிகை ஜோதிகா தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்தவர்.மேலும் இவர் சக நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதற்கு பின் சினிமாவிற்கு ஒரு இடைவெளி கொடுத்தார்.  சினிமாவின் தனது இரண்டாவது பயணத்தில் மிகவும் கவனமுடன் கதைகளை  தேர்வு செய்து நடித்து வருகிறார்.தற்போது நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள படம் ராட்சசி படம் ஜுலை 5-ல் வெளிவர உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.படம் பள்ளி நிகழ்வுகளை படம் பிடித்து காண்பித்துள்ளது.இந்நிலையில் ரசிகர்கள்  படத்தின் டீசரைப் பார்த்து விட்டு நடிகை ஜோதிகாவை லேடி சமுத்திரகனி என்று கூறியுள்ளனர் படம் மற்றொரு   சாட்டை மற்றும் பள்ளிக்கூடம் என்றும் கூறி தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.
இது குறித்து நடிகை ஜோதிகா தற்போது ராட்சசி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.அதில் நடிகை ஜோதிகா நான் ட்விட்டரில் இல்லை. எனவே எனது கணவரின் போனில் தான் இதனை பார்த்தேன். (சட்டை -பள்ளிக்கூடம் ) போன்று படங்களை போன்று இந்த  படத்திற்கு இதுபோன்ற சமூகக் கருத்துகள் வந்துள்ளது மிகவும் நன்றாக உள்ளது.இன்றைய      சூழலில் இது போன்ற படங்கள்  இன்றைக்கு  தேவைப்படுகிறது.
மேலும் அவர் பேசுகையில் 99% மாணவர்கள் அகரம் பவுண்டேஷனில் உள்ளனர்.அதில் அரசு பள்ளிகளில் இருந்து வந்து பயிலும் மாணவர்கள். அவர்களில் 35 % மாணவர்கள் இடம் பேசும் பொழுது ஒரு மாதம் அவர்களுடைய வகுப்புகளில்  ஏன்..? ஒரு ஆண்டு முழுக்ககூட ஆசிரியர்களே இருப்பதில்லை என்று தெரிகிறது. ஆசிரியர்கள் இல்லாமல்  அந்த மாணவர்கள் வகுப்புகளில் படித்து இருக்கிறார்கள்.
அதுபோல ஒரு சிஸ்டத்தை கொடுத்துவிட்ட பின் மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டும் என்று இவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள். என்று தெரிவித்தார் மேலும் அவர் இப்படிப்பட்ட  பிரச்னைகளைப் பேசுகின்ற கதைகள் 100 படங்களில் வந்தாலும் அதனை  நாம் பார்க்க வேண்டும்.என்று தெரிவித்தார் என்னுடைய இரண்டாவது திரை பயணத்தில் மிகவும் நல்ல கதைகள் வருகின்றது.பெண்களுக்கு மரியாதை அளிக்கக்கூடிய ஆண்கள் எனது இந்த இரண்டாவது திரைப்பயணத்தில் தான் அதிகம் பார்க்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்