சீமானை கைது செய்து காட்டுகிறோம்… நடிகை விஜயலட்சுமி ஆவேசம்.!

Published by
மணிகண்டன்

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை விஜயலட்சுமி முன்னதாக , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறி இருந்தார். அவர் அப்போது கூறுகையில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை உடல்ரீதியாக பயன்படுத்தி கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

இந்த புகார் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருடங்கள் ஆகிவிட்டன. இதற்கிடையில், சீமான் – விஜயலக்ஷ்மி இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்பட்டது. இதனை இன்று நடிகை விஜயலக்ஷ்மி மறுத்துள்ளார். இன்று சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலக்ஷ்மி, ஒரு பெண்ணான எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.  நாங்கள் சமாதானம் செய்துகொள்ளவில்லை என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றிவிட்டார்.

இத்தனை நான் வெளிப்படையாக கூறாமல் இருந்ததற்கு காரணம், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது பெரிய அளவில் விசாரணை செய்யவில்லை. என்னை மட்டுமே 2,3 முறை காவல்துறையினர் விசாரணை செய்தனர். சீமானிடம் விசாரணை நடைபெறவில்லை.

சீமான் மீது நான் தொடுத்த வழக்கு நீதிமன்றதில் வழக்கு நிலுவையில் தான் உள்ளது. தற்போது புதியதாக ,புகார் ஒன்றை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளேன்.  அதிமுக காலத்தில் எனக்கு எந்த வித நீதியும் கிடைக்கவில்லை. சீமானை கைது செய்து காட்டுகிறோம். ஓர் திமிரு பிடித்தவர் உடன் நான் வாழ்ந்திருக்கிறேன். 1 கோடி எல்லாம் கொடுக்கப்படவில்லை எனவும் செய்தியாளர்கள் மத்தியில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பரபரப்பு தகவல்களை கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இந்த முற  வடகிழக்கு பருவமழையின்…

3 minutes ago

உதயநிதி படத்தால் விஜய் படத்தை இழந்த விடாமுயற்சி இயக்குநர்! அவரே சொன்ன வேதனை கதை!

சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 6-ஆம்…

57 minutes ago

சதமடிக்கும் இஸ்ரோ… அடுத்த பாய்ச்சல் குறித்த அப்டேட்.! நாளை மறுநாள் விண்ணில் பாயும் GSLV-F15 ராக்கெட்!

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 100வது ஏவலுக்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட்…

1 hour ago

வேங்கைவயல் விவகாரம் : “குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது”..நீதிமன்றத்தில் மனு!

சென்னை :புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதிபயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க…

2 hours ago

இந்தியாவில் முதல் மாநிலம்… உத்தரகாண்டில் அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்!

உத்தரகாண்ட் : பாஜக ஆளாத மாநிலங்களில் பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக…

2 hours ago

வரலாறு தெரியாத தற்குறிகளுக்கு தான் அவர் மண்! சீமானுக்கு பேராசிரியர் அருணன் பதிலடி!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேசிய விஷயம் இன்னும் ஓயாத ஒரு சர்ச்சையாக…

3 hours ago