முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் என்னை ஏமாற்றிவிட்டார்.நான் அவரை பார்த்துவிட்டு தான் செல்வேன் என நடிகை சாந்தினி கூறி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் இருக்கிறார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்து இருந்தார் . அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒன்றாக வாழ்ந்துவிட்டு இப்போது ஏமாற்றிவிட்டார் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் பெயரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்து நடிகை சாந்தினி கொடுத்த வழக்கு சில மாதங்களுக்கு முன்னர் வாபஸ் பெறப்பட்டது .
இந்நிலையில், இன்று ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டிற்கு நேரடியாக சென்ற நடிகை சாந்தினி, அவரது வீட்டை முற்றுகையிட முயன்றுள்ளார். பின்னர் அந்த இடத்தி பரபரப்பு நிலவியதுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் இது குறித்து நடிகை சாந்தினி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ 4 மாதங்களுக்கு முன்னர் அவர் (முன்னாள் அமைச்சர் மணிகண்டன்) மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டேன். அவர் என்னிடம், ‘ என்னால் உன் வாழ்க்கை வீணாய் போனது. நான் என்னால் ஆனதை உனக்கு செய்கிறேன்.’ என வாக்குறுதி கொடுத்தார்.’ என்று ஷாந்தினி கூறினார் .
மேலும், ‘ வாபஸ் பெற்றதில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று நான் மதுரையில் அவர் வீட்டருகே பார்த்துவிட்டேன். என்னை பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் தான் ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தேன். ‘ என கூறினார்.
மேலும் பேசுகையில் , ‘ என்னை ரவுடிகள் வைத்து மிரட்டுகிறார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்.’ என குற்றம் சாட்டி, இறுதியில், ‘ நான் அவரை பார்த்துவிட்டு தான் போவேன். என்னிடம் என்ன வென்று தெளிவாக பதில் சொல்ல வேண்டும் அதுவரையில் நான் செல்வதாயில்லை.’ என செய்தியாளர்களிடம் தெரிவித்த்தார் நடிகை சாந்தினி.
இந்த சம்பவத்தை அடுத்து சாந்தினியை ரமந்தபுரம் பஜார் காவல்நிலைய அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…