நடிகை ரேகா நாயர் கார் மோதி ஒருவர் பலி! போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை : பிரபல நடிகை ரேகா நாயரின் கார் மோதி மஞ்சன் (வயது 55) என்பவர் உயிரிழந்தார்.
சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சன். இவர் நேற்று இரவு ஜாஃபர்கான்பேட்டை சாலையில் படுத்துக்கிடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் படுத்திருந்த மஞ்சன் மீது ஏறி இறங்கியுள்ளது. கார் ஏறிய வேதனையில் மஞ்சன் அலறியுள்ளார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டும் கூட கார் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. சத்தத்தைக் கேட்டு வேகமாக வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மஞ்சனை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மஞ்சன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மஞ்சனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய கிண்டி போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த சிசிடிவி காட்சியில் விபத்தில் உயிரிழந்த மஞ்சனை ஏற்றிச் சென்ற காரின் பதிவெண் கிடைத்த நிலையில், அதனை வைத்து விசாரித்தனர். அதன் அடிப்படையில், அந்த கார் பிரபல நடிகையான ரேகாவுடைய கார் என்பதும் காரை ஓட்டிச்சென்றவர் ரேகா நாயரின் ஓட்டுநர் பாண்டி (வயது 25) என்பதும் தெரியவந்தது.
ரேகா நாயரின் டிரைவர் பாண்டியைக் கைது செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் போது காருக்குள் ரேகா நாயர் இருந்தாரா என்பது பற்றிய தகவலும் வெளியாகவில்லை. விசாரணைக்குப் பிறகு தான் அனைத்து விவரங்களும் தெரிய வரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025