கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில், முன்ஜாமீன் மனு கோரியிருந்த இரு மருத்துவர்களுக்கும் முன்ஜாமீனை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில் முன் ஜாமீன் கோரியிருந்த, அரசு மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். மருத்துவக் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டி உள்ளதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கப் போவதில்லை என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
உயர்நீதிமன்ற தரப்பில் கூறியதாவது, இந்த சம்பவம் குறித்த விசாரணை தற்போது நடந்து வருவதால் உடனடியாக ஜாமீன் வழங்கமுடியாது என்று கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது, மருத்துவர்கள் காவல்துறையில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருக்கிறது. மருத்துவர்களின் குடும்பத்திற்கு எந்தவித தொந்தரவும் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…