நடிகை குஷ்பூவின் ட்வீட்டர் கணக்கு முடக்கம்…! ட்விட்டர் பதிவுகளை அழித்த மர்மநபர்…!
பிரபல நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் முடக்கியுள்ளார்.
பிரபல நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் முடக்கியுள்ளார். ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மட்டுமல்லாமல், அதில் உள்ள பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020-ம் ஆண்டு ஏப்ரலிலும் இவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை குஷ்பூ இதுகுறித்து கூறுகையில், ட்விட்டர் கணக்கு முடக்கியது தொடர்பாக டிஜிபி மற்றும் சைபர் கிரைமில் புகாரளித்துள்ளேன். ட்விட்டர் கணக்கை முடக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.