தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!
கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் என நடிகை கஸ்தூரி மன்னிப்பு கோரியுள்ளார்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என கூறியதால், கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், “நான் கூறிய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. தெலுங்கு பேசும் மக்களை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. நான் கூறிய கருத்துகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்” என மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது மன்னிப்பு கடிதத்தில், “பாரதத் தாயின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி நான். சாதி, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். தெலுங்கு திரையுலகில் எனக்கு கிடைத்த வரவேற்பை நான் மதிக்கிறேன்.
தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் ஒரு குடும்பத்தையும் கொடுத்துள்ளனர்.
நான் வெளிப்படுத்திய கருத்துக்கள், சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக, அதுவும் சூழல் சார்ந்தவையே தவிர, பொதுவான தெலுங்கு சமூகத்திற்கு எதிரானது அல்ல.
தெலுங்கு மக்களின் மனதை காயப்படுத்துவது எனது நோக்கமில்லை. கவனக்குறைவாக என்னுடைய பேச்சால் அவர்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
தெலுங்கு மக்கள் குறித்த எனது கருத்துக்களை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்த தமது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகை கஸ்தூரி#Kasthuri #kasthurishankar #Telugu#ActressKasthuri pic.twitter.com/O1Rylch9ny
— Priya Gurunathan (@JournoPG) November 5, 2024