தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி.!

Default Image

நடிகை ஜோதிகா தற்பொழுது ரூ. 25 லட்சம் நிதியுதவியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அளித்திருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மிகவும் பழமையான அரசு மருத்துவமனைகளுள் ஒன்று தஞ்சாவூர் ராஜ மிராசுதார் மருத்துவமனை. இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், கோவில்களை புதுப்பிக்க செலவு செய்கிறீர்கள் அந்த காசை பள்ளி கூடம், மருத்துவமனை கட்டுவதற்கு செலவிடுங்கள் என கூறியிருந்தார்,இதனால் அப்பொழுது எதிர்ப்பும் எழுந்தது வந்தது.

அதற்கு பிறகு பேசிய நடிகை ஜோதிகா ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக நான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு எதிர்புறத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அந்த மருத்துவமனையின் சுத்தம், சுகாதாரம் தோற்றம், மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா தற்பொழுது தஞ்சாவூர் ராஜ மிராசுதார் மருத்துவமனையில் உரிய வசதி இல்லையென்று மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 25 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார், இதனால் மருத்துவமனையில் மோசமாக பழுது அடைந்திருந்த சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா சீர் செய்து வண்ணங்கள் பூசப்பட்டு புதுப்பித்து தந்துள்ளனர். ஜோதிகாவின் இந்த நற்செயலை பாராட்டி பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்