அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!

Gayathri Raguram

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம்,  தலைவர் அண்ணாமையை கடுமையாக விமர்சித்தார்.

இதனால் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார். இதையடுத்து, பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அக்கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்தார்.

ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை!

இதன்பின் நடிகை காயத்ரி ரகுராம் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்து நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையை அவ்வப்போது விமர்சித்து வருகிறார். அதாவது, கட்சியில் இருந்து விலகிய பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு கடுமையான குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்களை தொடர்ந்து காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என்றும் பெண்களுக்கு எந்த கட்சியில் மரியாதை இருக்கிறதோ அந்த கட்சியில் இணைந்து செயல்படுவேன் எனவும் காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகை காயத்ரி ரகுராம்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இபிஎஸ்யை சந்தித்து, அதிமுகவில் இணைந்தார். என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ளேன் என்றும் என் தந்தை அதிமுகவில் பயணித்துள்ளார் எனவும் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்